7 May 2012

ஜாதிவாரி கணக்கெடுப்பும் நீர்த்துப்போன திராவிட கருத்தியலும்



சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியது தான் தாமதம்.. செய்தித் தாள்களில் நாள் தோறும் புரட்சிகர அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. உட்பிரிவுகளை பதியாமல் நாடார்என்றே குறிப்பிட வேண்டும், பொதுவான பெயரில் பதிவு செய்யக் கூடாது தேவேந்திரர்கள் அல்லது தேவேந்திர குலம்என்று தெளிவாக பதிவு செய்ய வேண்டும், ’வன்னிய குல சத்திரியர்’, ’வேளாளர்’, ’அருந்ததியர்’, ‘யாதவா’, ... என்ன கொடும்மைங்க இது??

ஈரோட்டு சூரியன்களும் திருக்குவளை தீப்பந்தங்களும் வீர கொளத்தூர் மணிகளும் செந்தமிழர்களும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழ்த்திருநாட்டில்.. ஒரு பகுத்தறிவு பட்சியாவது சாதி இல்லைஎன்று பதிவு செய்யும்படி தமிழ்ச் சமூகத்தை கேட்டுக் கொள்ளும் என்று எதிர்பார்த்தால்.. அடடா.. ஆச்சரியக் குறி. என்னது.. அவங்களும் அவங்களோட சாதிப் பட்டத்தைத் தான் சொல்லப் போறாங்களா..? மங்களம் உண்டாகட்டும்!

ஸோ.. இவங்க எல்லோரும், இவங்க அமைப்புகளிலே இருக்கிறவங்க எல்லோரும், பிரம்மா- முகம்,தோள்,தொடை,பாதம் உண்மையை ஒத்துக் கொள்றாங்க! அதாவது, தாம் சூத்திரர்தான் என்பதை (ஈவெரா வார்த்தையில் சொன்னா நாங்கள் தேவடியா மக்கள் தான் என்பதை’ ) நூறு சதம் மனப்பூர்வமாய் வெளிப்படையாக தமது வாயினாலேயே ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்பமாய் கையெழுத்துச் சான்றும் போட்டுத் தர்றாங்க. சபாஷ்! பேஷ் பேஷ்!! என்ன்னாது.. சலுகைகளை பெறதுக்காக வேறு வழியில்லாம இப்படி சொல்ல வேண்டியிருக்குதா? வேணாங்க.. அப்புறம் ஏதாச்சும் சொல்லிடப் போறேன். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஒருபக்கம், நாங்கள் விருந்தாளிக்கு பொறந்தவர்கள் தான் என கையெழுத்திடும் வைபவங்கள் ஒருபக்கம். அபத்தத்தின் உச்சம்!

நான் வாசித்த வரையில் சிறு ஒளிக் கீற்றாய் மாற்றி ஒலித்த ஒரே குரல் இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலியுடையது. முஸ்லீம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கிரி, லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே முஸ்லீம்கள் அனைவரும் மதத்தை மட்டும் குறிப்பிடவும்”. மகிழ்ச்சி! முஸ்லீம் லீக் இயக்கக சகோதரர் சகோதரிகளுக்கு வணக்கங்கள்!

இந்த விடயத்தில் இஸ்லாமியர்களிடையேயும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. பெரும் ஆதரவாளர்களை தமிழகத்தில் கொண்டிருக்கும் தவ்ஹித்அமைப்பினர் சாதி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தங்களது பிரிவை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். அல்லாவிற்கு உருவம், முஸ்லீம்களுக்கு சாதி என்ற இரு கேள்விகளுக்கும் இருக்கு ஆனா இல்லைஎன்பது இவர்களின் தரப்பு.

எவர்கள் எப்படியோ.. சாதி இல்லைஎன்றே பதிவு செய்ய நான் உத்தேசித்து இருக்கிறேன்.

5 comments:

  1. தேர்தலில் வாக்காளர்கள் ஓ போடும் வசதி இருப்பதைப் போலவே, ஜாதிவாரி கணக்கெடுப்பில், விரும்பும் எவரும் 'ஜாதியற்றோர்' என பதிவு செய்ய அனுமதியும், அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப் பட்டு, இது சம்பந்தமாக சட்டத் திருத்தம் ஒன்றை கொணர்ந்து, இந்த கணக்கெடுப்பு நடை பெற்றிருக்குமானால் நிச்சயம் வரலாற்று நிகழ்வாயிருந்திருக்கும். இளைஞர்கள் இளைஞிகள் என பலரும் தங்களை அவ்வாறே பதிந்திருப்பர். அதன் எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாகவும், அடுத்த கணக்கெடுப்பு நடைபெறும் போது பெருமளவு சதவிகிதம் அவ்வாறே பதிவு செய்யவும், ஏதுவாய் இருந்திருக்கும். மெல்ல மெல்ல வரும் வருடங்களில் ஜாதிய எல்லைகள் ஒழிந்த சமூகம் பிறக்கவும் முக்கிய மைல்கல்லாய் இருந்திருக்கும்.தவறவிட்டுவிட்டோம்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஆனால் என்னை போன்றவர்கள் மட்டும் ஜாதி இல்லை என்று சொல்வதால் ஜாதி ஒழிந்துவிடுமா என்ன? கொஞ்சம் Matrimonial column படித்து பாருங்கள்.. யார் இவர்களை வற்புறுத்துவது?

    ReplyDelete
  4. தினம் வரும்Matrimonial column குறித்து யாரும் கவலைபடுவதில்லை.நான் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லவே விரும்புகிறேன்,என்னிடம் உறவு கொள்ளதான் இங்கு நிறைய பேருக்கு கசக்குது.வீடு தேடும் வைபவம் முதல் சுடுகாடு வரை எங்கேனும் ஒரு இடத்தில் சாதி வெறி தொடரத்தான் செய்கிறது.மக்கள் படிப்பிலும் அந்தஸ்திலேயும் உயரும் போது மட்டுமே கொஞ்சம் மரியாதையாவது கிடைக்கிறது.ஆனாலும் பொண்ணு கிடைப்பதுதான் கஷ்டமா இருக்கு.சலுகைகள் இல்லாது போனால் இன்றும் தன் ஊரில் தன் வேலை என்று குறிப்பிட்டதை மட்டும் செய்து செத்திருப்பார்கள்.தங்களுடைய மற்ற பதிவுகளில் காணப்படும் பரந்த கண்ணோட்டம் இங்கே சுருங்கியதாகவே உணர்கிறேன்.முக நூலில் உள்ள உங்கள் PROFILE வசனம் போலவே இங்கு நிலைமை உள்ளது.தனியாக பல பதிவு போடும் அளவுக்கு நான் அனுபவித்திருக்கிறேன்...காண்கிறேன்.சலுகைகள் பெற்று படித்தாலும் உயர் பொறுப்பில் இருந்தாலும் மதிக்கப்படாத எத்தனையோ பேரை காணுகின்றேன்.இந்த ஜாதி மக்களின் எண்ணிக்கையை பொறுத்தே ஒதுக்கீடு என்பதால் ஜாதி குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.கோடி பணம் வைத்திருக்கும் கமல் போன்றவருக்கு ஜாதி அவசியமில்லை.தெரு கோடியில் நிற்கும் மக்களுக்கு முன்னேறி செல்ல இதுவும் ஒரு அவசியமே.சம்பந்தம் இல்லாமல் ஓட்டு கட்சிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நலம்.

    ReplyDelete
  5. அருமையான எழுத்து... கருத்தும் அப்படியே! என்னுடைய ஏகோபித்த ஆதரவு உங்கள் கருத்துக்கு!

    ReplyDelete

வாங்க பேசலாம்..